வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை -வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை -வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை -வளிமண்டலவியல் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2017 | 9:43 am

நாட்டின் வடக்கு, கிழக்கு,வடமத்திய மாகாணங்ளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மாகாணத்தில் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் அதிகரித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சற்று குறைவடைந்துள்ளது.

நில்வளா, களு, மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் நாட்டின் 9 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, இரத்தினபுரி, மாத்தளை , காலி , மாத்தறை , கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்