பாலைநகர் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

பாலைநகர் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

பாலைநகர் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2017 | 4:30 pm

திருகோணமலை கிண்ணியா – பாலைநகர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்ග

கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (02) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மணல் ஏற்றுவதற்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் பிரிதொரு இடத்தில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா-சூரங்கல் மற்றும் குட்டிக்கராச்சி பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் நாளை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்