தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2017 | 7:50 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கூடினர்.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளின்
முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆசன பங்கீடு தெடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம்
வகிக்கும் மூன்று கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியுடன் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியாது என ஏற்கனவே அறிவித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்