அரிசி மூலம் மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தல்

அரிசி மூலம் மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2017 | 8:11 pm

கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி, நிதி அமைச்சரால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, அரிசியைப் பயன்படுத்தி மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

நவம்பர் மாதம் 9ஆம் திகதி வௌியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, அரிசி, சோளம் மற்றும் பழ வகைகளைப் பயன்படுத்தி ஸ்பிரிட் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுவரி கட்டளைச்சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நிதி அமைச்சர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ அரிசி, 100 ரூபாவைத் தாண்டியுள்ளது.

மதுவரித் திணைக்களத்திடம் இந்த விடயம் தொடர்பில் நாம் வினவினோம்.

ஸ்பிரிட் உற்பத்தி பயன்படுத்தப்படும், தேங்காய் சார்ந்த உற்பத்தி குறைவடைந்துள்ளமையாலேயே, இந்தத் தீர்மானத்திற்கு வந்ததாக திணைக்களம் குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்