முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

By Bella Dalima

07 Dec, 2017 | 8:47 pm

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவு செய்வதற்காக பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதற்கான விசேட வர்த்தமானி தற்போது வௌியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.