தளபதி 62 படக்குழுவின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி 62 படக்குழுவின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு

By Sujithra Chandrasekara

06 Dec, 2017 | 11:42 am

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 62 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார்.

`துப்பாக்கி’, `கத்தி’ படங்களை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்திரன் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தற்போது ராகவா லாரன்சின் `காஞ்சனா 3′ படத்தை தயாரித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து விஜய் 62 படத்தை தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கான படப்பிடிப்பு வருகிற பெப்ரவரியில் தொடங்குகிறது. படம் தீபாவளிக்கு வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.