டெல்லி வாசிகளுக்கு மட்டும் நன்மை செய்த ஓகி புயல்

டெல்லி வாசிகளுக்கு மட்டும் நன்மை செய்த ஓகி புயல்

By Bella Dalima

07 Dec, 2017 | 4:14 pm

தமிழகம், கேரளா, லட்சத் தீவுகளை சூறையாடி பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்ற ஓகி புயல், இந்தியத் தலைநகர் டெல்லிக்கு மிகப்பெரிய நன்மையை செய்திருக்கிறது.

டெல்லியில் நிலவி வந்த காற்று மாசினை ஓகி புயல் ஓரளவு குறைத்துள்ளது.

ஓகி புயலால் காற்றின் தரம் மிக மிக மோசம் என்ற நிலையில் இருந்து மோசம் என்ற தரத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் காற்றின் தரம் உயர்ந்து வருவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியில் நிலவிய மிக மோசமான காற்று மாசு காரணமாக இதுவரை காற்றின் நகர்வு வேகம் மிகக்குறைவாக இருந்தது.

ஆனால், தற்போது வடக்கில் இருந்து காற்று தெற்கு நோக்கி இனி எளிதாக நகரும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

காற்று மாசுபாட்டால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த டெல்லி வாசிகள் ஓகி புயலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.