இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா  அங்கீகரிப்பதாக ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா  அங்கீகரிப்பதாக ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

By Sujithra Chandrasekara

07 Dec, 2017 | 10:36 am

ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து குறித்த தீர்மானத்தை ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வௌ்ளை மாளிகையில் உரையாற்றிய போதே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரில் செயற்பட்டு வரும் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அமெரிக்க வௌியுறவுத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கான வழிகாட்டலாக அமைவதற்கும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்குமென ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஒத்துழைப்பு நல்கினால் இரு நாட்டு பிரச்சினையை தீர்ப்பதில் அமெரிக்கா ஆதரவளிக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.