செங்கலடியில் ஆணின் சடலம் மீட்பு

செங்கலடியில் ஆணின் சடலம் மீட்பு

By Sujithra Chandrasekara

18 Dec, 2017 | 3:48 pm

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள கால்வாயிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாந்துறை திருவள்ளூர் வீதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான 35 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை தனது வீட்டிலிருந்து சென்ற குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

ஏறாவூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.