கிறிஸ்துமஸ் மர அலங்காரத்தை சேதப்படுத்திய அணில் கைதாகி பிணையில் விடுதலை

கிறிஸ்துமஸ் மர அலங்காரத்தை சேதப்படுத்திய அணில் கைதாகி பிணையில் விடுதலை

By Bella Dalima

07 Dec, 2017 | 4:30 pm

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணிலை பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

குற்றச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து அணில் ஒன்றைக் கைது செய்த பொலிஸார், அதை சில மணி நேரத்தில் பிணையில் விடுவித்துள்ளனர்.

கைது செய்யும் அளவுக்கு அணில் என்ன குற்றம் செய்தது?

நியூ ஜெர்சியில் ‘சீ கிர்ட்’ பகுதியில் மிகப்பெரிய அளவில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது.

அந்த மரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த மின் விளக்கு அலங்காரத்தை ஒரு அணில் கடித்து சேதப்படுத்தி விட்டது.

இதனால் கிறிஸ்துமஸ் மரத்தில் பல மின் விளக்குகள் எரியவில்லை.

எனவே, அந்த அணிலை நியூஜெர்சி பொலிஸார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இத்தகவலை ‘பேஸ்புக்’கிலும் பெருமையாக வெளியிட்டனர்.

ஆனால், சில மணி நேரத்திலேயே அது பிணையில் விடுதலையானது.

அதன் பிறகு பொலிஸார் அந்த அணிலைப் பார்க்கவில்லை.

Policeman_and_squi_3378069b