களுபோவில சிறுவர் இல்ல சிறுமிகள் துஷ்பிரயோகம்: நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

களுபோவில சிறுவர் இல்ல சிறுமிகள் துஷ்பிரயோகம்: நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

By Bella Dalima

07 Dec, 2017 | 10:44 pm

நுகேகொடை – கங்கொடவில நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சிலர் இன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தெஹிவளை – களுபோவில பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் 18 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் தொடர்ந்தும் குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருப்பது தமக்கு கவலையளிப்பதாகவும் அவர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தினர்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.