ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்றவரைக் காணவில்லை

ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்றவரைக் காணவில்லை

By Bella Dalima

07 Dec, 2017 | 8:13 pm

அம்பாறை – ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் கடலுக்குச்சென்ற இரண்டு மீனவர்கள் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த அலையில் சிக்கியுள்ளனர்.

இதன்போது, 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய ஒருவரே காணாமற்போயுள்ளார்.

காணாமற்போனவரைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, கடந்த 15 ஆம் திகதி நீர்கொழும்பு கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.