உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 3029 பேருக்கு பதவி உயர்வு

உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 3029 பேருக்கு பதவி உயர்வு

By Sujithra Chandrasekara

07 Dec, 2017 | 11:12 am

உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 3029 பேருக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பொலிஸ் இன்பெக்டர்களாக பதவி உயர்த்தப்படவுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் சாகல ரத்னாயவிற்கும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (06) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

எட்டு வருடங்கள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக கடமையாற்றிய 320 பெண் பொலிஸாரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக தரமுயர்த்தப்படவுள்ளனர்.

இந்தப் பிரேரணை சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு இன்று சமர்பிக்கப்படவுள்ளது.