இலங்கை – மலேஷிய 60 வருட உறவை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு 14000 வீடுகள்

இலங்கை – மலேஷிய 60 வருட உறவை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு 14000 வீடுகள்

By Sujithra Chandrasekara

18 Dec, 2017 | 8:17 pm

மூன்றுநாட்கள் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதமர் நஜீத் ரஷாக் இன்று ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கும் மலேஷியாவிற்கும் இடையிலான 60 வருட இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மலேஷிய பிரதமர் நஜீப் ரஷாக் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இராணுவ மரியாதையுடன் மலேஷிய பிரதமர் இதன்போது வரவேற்கப்பட்டார்.

மலேஷியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல்துறைசார் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் விமான நிலைய முகாமைத்துவம், மத்தியதர பிரிவினருக்கான வீடமைப்புத் திட்டம் , விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், நனோ தொழில்நுட்பம். கல்வி, இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் புலனாய்வுப் பிரிவு தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

மத்தியதர பிரிவினருக்கு 14,000 வீடுகளை அமைப்பதற்கு இதன் போது இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு மலேஷியா தொடர்ந்தும் தெரிவித்து வரும் ஆதரவை இதன்போது ஜனாதிபதி பாராட்டினார்.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாதிடப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் வர்த்தக சமூத்தையும் இந்த விஜயத்தின் போதி மலேஷிய பிரதமர், சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.