இந்தியாவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட்: 4 ஆவது நாள் ஆட்டத்தில் 31 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை

இந்தியாவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட்: 4 ஆவது நாள் ஆட்டத்தில் 31 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை

By Bella Dalima

05 Dec, 2017 | 5:12 pm

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 536 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்று, 163 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது.

இதற்கமைய இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், 410 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்து, இலங்கையைத் துடுப்பெடுத்தாட அழைத்து.

இலங்கை இந்தியாவிற்கு இடையிலான இறுதி நாள் ஓட்டம் நாளை (06) இடம்பெறவுள்ள நிலையில், 7 விக்கெட்களை கைவசம் வைத்துள்ள இலங்கை,
வெற்றியிலக்கை எட்ட 379 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.