அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

By Sujithra Chandrasekara

06 Dec, 2017 | 9:28 am

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி இந்த வாரத்திற்குள் வௌியிடப்படும் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய தேங்காய் ஒன்றிற்கான சில்லரை விலை 75 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 76 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பருப்பு ஒரு கிலோகிராம் அதிகபட்சம் 130 ரூபா வரை மாத்திரமே விற்பனை செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.