யாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2017 | 7:03 pm

யாழ். குடா நாட்டில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

வலி வடக்கு – வசாவிளான் வட மூலை பகுதியில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது.

வசாவிளான் ஜே 205 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இந்தக் காணியில் ஆலயம், பாடசாலை , விவசாய நிலம் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் அடங்குகின்றன.

பொதுமக்களின் காணியை அவர்களுக்குக் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத்ததளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த மே மாதம் வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2021ஆம் ஆண்டிற்குள் வடக்கில் சுமார் 3,400 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 2018 இல் 4.54 ஏக்கரும், 2019 இல் 1.06 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்