உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2017 | 1:09 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது.

93 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அறிவிப்பு வௌியிடப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதிலிருந்து 14 ஆம் திகதி வரை வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, சுயேட்சைகுழு வேட்பாளர்கள் 5,000 ரூபாவும், அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர்கள் 1500 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

பொது ஜன முன்னணி கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, தேர்தலை பிற்போடுவதற்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்