ஐஸ்வர்யா ராயை அழ வைத்த புகைப்படக் கலைஞர்கள்

ஐஸ்வர்யா ராயை அழ வைத்த புகைப்படக் கலைஞர்கள்

ஐஸ்வர்யா ராயை அழ வைத்த புகைப்படக் கலைஞர்கள்

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2017 | 5:47 pm

தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயை புகைப்படக் கலைஞர்கள் அழவைத்திருக்கிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் அவருடைய மகள் ஆரத்யாவுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

உதடு பிளவுபட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதற்கு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஐஸ்வர்யா, அவரது மகளுடன் சென்றார்.

இதை அறிந்ததும் ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் தாய்- மகளை படம் எடுப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு இருந்தனர்.

இதனால் கூச்சல் அதிகமானது. எனவே ஐஸ்வர்யா ராய், “இது புகைப்படம் எடுப்பதற்கான நிகழ்ச்சி அல்ல. குழந்தைகள் நிகழ்ச்சி. அவர்கள் பயப்படுகிறார்கள். அமைதியாக இருங்கள். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டாம்” என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்.

ஆனால், யாரும் அதைக் கேட்கவில்லை. இதனால் மனம் வருந்திய ஐஸ்வர்யா ராய் கண்களில் கண்ணீர் பெருகியது.

இந்த நிகழ்ச்சியில் அவர் கண்கலங்கிய புகைப்படம் இணையத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்