மட்டக்களப்பிற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

மட்டக்களப்பிற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2017 | 3:38 pm

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் அவர் பதவிப்பிரமாணம் செய்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம் . சார்ள்ஸ் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றதன் பின்னர் மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் பதவியில் வெற்றிடம் நிலவியது.

இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்ற அமைச்சினால் மாணிக்கம் உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தினூடாக மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்