நிதி மோசடிகளை விசாரிக்கும் அதிகாரத்தை மேல்நீதிமன்றத்திற்கு வழங்கும் சட்டத்தை தயாரிக்குமாறு பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2017 | 11:13 am

நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கான அதிகாரத்தை மேல்நீதிமன்றத்திற்கு வழங்கும் வகையில் சட்டத்தைத் தயாரிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான வழக்குககள் தற்போதுநீதவான் நீதிமன்றங்களிலேயே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதாகவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக நிதி மோசடி தொடர்பான வழக்குகளை மேல் நீதிமன்றத்தில் மேற்கொள்ளும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்