தேங்காய் விலை அதிகரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் வாழ்க்கை செலவு குழு அவதானம்

தேங்காய் விலை அதிகரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் வாழ்க்கை செலவு குழு அவதானம்

தேங்காய் விலை அதிகரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் வாழ்க்கை செலவு குழு அவதானம்

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2017 | 11:12 am

கைத்தொழிலுக்காக தேங்காயை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று கூடிய வாழ்க்கை செலவு குழு கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது தேங்காய்க்கு நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் லுணுவில தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தினூடாக ஆராயப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

சந்தையில் காணப்படும் தேங்காய்களை அதிக பணம் செலுத்தி கொள்வனவு செய்வதனூடாக கைத்தொழிலில் ஏற்படும் நட்டம் தொடர்பிலும் வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேங்காய் விலை அதிகரிப்பதனால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியங்கள் நிலவுகின்றதா என்பது தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை தேங்காய்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நேற்று கூடிய வாழ்க்கை செலவு குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

தற்போது 85 ரூபா தொடக்கம் 100 ரூபா வரையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்