இயக்குனர் சசிக்குமாரின் உறவினரும் தயாரிப்பு நிறுவன நிர்வாகியுமான அசோக் குமார் தற்கொலை

இயக்குனர் சசிக்குமாரின் உறவினரும் தயாரிப்பு நிறுவன நிர்வாகியுமான அசோக் குமார் தற்கொலை

இயக்குனர் சசிக்குமாரின் உறவினரும் தயாரிப்பு நிறுவன நிர்வாகியுமான அசோக் குமார் தற்கொலை

எழுத்தாளர் Bella Dalima

22 Nov, 2017 | 4:51 pm

திரைப்பட இணை தயாரிப்பாளராகவும் இயக்குனர் சசிக்குமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (21) தற்கொலை செய்து கொண்டார்.

கடன் கொடுத்திருந்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.

அசோக்குமாரின் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக திரைப்படங்களுக்கு கடன் வழங்கும் ஜி.என். அன்புச் செழியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பரவலாக அறிமுகமானவர் சசிகுமார். இவர் கம்பனி புரடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இந்த நிறுவனத்தை அவரது உறவினரான அசோக் குமார் நிர்வகித்து வந்தார்.

அசோக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் தயாரித்த எல்லாப் படங்களையும் குறிப்பிட்ட திகதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த மிகப் பெரிய பாவம் ஜி.என். அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது.

வட்டிக்கு மேல் வட்டியாக கடந்த ஏழு ஆண்டுகளாக வாங்கியவர், ஆறு மாத காலமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். அரசாங்கம், ஆள்வோரின் பெரும் புள்ளிகள், சினிமா ஃபெடரேஷன் தலைவர் என எல்லோரும் அவர் கையில்.

யாரேனும் ஜி.என். அன்புச்செழியனுக்கு சொல்லுங்கள். அதிகாரம், அரசு எல்லாவற்றையும் அவர் சமாளிக்கலாம். தனியாக இருக்கும்போது என்றேனும் தனது மனசாட்சியுடன் பேசச் சொல்லுங்கள். இந்தக் கடிதத்தைக்கூட வெளியில் தெரியாமல் அழிக்கும் வித்தை அவருக்குத் தெரியும்.

என எழுதியுள்ளார்.

அசோக் குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பிறகு, வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் அசோக் குமாரை ஜி.என். அன்புச்செழியன் தற்கொலைக்குத் தூண்டியதாக சசிக்குமார் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்