2018 இல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2018 இல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2018 இல் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

21 Nov, 2017 | 4:30 pm

2018 ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை சர்வதேச சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுயள்ளது.

பூமி சுழலும் வேகத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டிருப்பது ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சுழல்வதில் காணப்படும் இந்த ஏற்றத்தாழ்வு என்பது மிக மிகச் சிறிய அளவுக்கே உள்ளது.

பூமி சுழற்சிக்கும் நிலநடுக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

பூமி சுழற்சி வேகம் குறையும்போது அது நாளின் நீளத்தில் ஒரு மில்லிசெகண்ட் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதனை அணுக்கடிகாரத்தைக் கொண்டே மிகத் துல்லியமாக அளவிட முடியும்.

ஆனால், பூமி சுழற்சியில் ஏற்படும் இந்த மிகச் சிறிய மாறுபாடுகள் நிலத்தடி ஆற்றல் அதிக அளவில் வெளிப்படுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது.

எனவே, பூமி சுழலும் வேகம் சிறிது குறைந்தாலும், அது அதிக எண்ணிக்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

இது குறித்து அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் பில்ஹம் தெரிவித்துள்ளதாவது,

”கடந்த 1900 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கங்களை ஆய்வு செய்தோம். பூமி சுழற்சியில் மாறுதல் ஏற்படும்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், வரும் 2018 ஆம் ஆண்டில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் நிகழ வாய்ப்புள்ளது,”

என கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்