பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் தொடர்பில் விசாரணை

பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் தொடர்பில் விசாரணை

பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2017 | 7:02 am

பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (21) இது தொடர்பில் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் குறிப்பிடுகின்றனர்.

பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவிய வதந்தியால் நேற்று முன்தினம் (19) இரவு கொழும்பு நகர் உள்ளிட்ட சில பகுதிகளின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் வாகன நெரிசலைக் காண முடிந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் பெட்ரோலிய வளத்துறை அமைச்சு முறைப்பாடு செய்திருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்