தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம் அரசியல் இலாபத்திற்காக முன்னெடுக்கப்பட்டது

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம் அரசியல் இலாபத்திற்காக முன்னெடுக்கப்பட்டது

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம் அரசியல் இலாபத்திற்காக முன்னெடுக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

20 Nov, 2017 | 8:34 pm

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களால் அதிகம் மதிக்கப்பட்ட தலைவர் எனவும் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 8 உறுப்பினர்களில் அவரும் ஒருவர் என சி.வி. விக்னேஷ்வரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டமான் தோட்டத்தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு தலைவர் என சி.வி. விக்னேஷ்வரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல்வாதிகள் அரசியல் இலாபத்திற்காக இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை தௌிவாகப் புலப்படுவதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்