2017 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் தெரிவு (video)

2017 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் தெரிவு (video)

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 2:39 pm

சீனாவில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் இந்த ஆண்டின் உலக அழகியாக தெரிவு செய்ய்ப்பட்டுள்ளார்.

சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்றது.

பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

நேற்று (18) நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர்(20) இந்த ஆண்டிற்கான இந்திய அழகியாகவும் தேர்வானார்.

தற்போது அவர் மருத்துவம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வானார்.

அதன் பிறகு 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகியாக தெரிவு இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகிப் பட்டம் வென்ற மனுஷி சில்லருக்கு பொலிவுட் திரைபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில், நமது உலகில் இருந்து மிஸ் வேர்ல்ட்… பெருமை மற்றும் மகிழ்ச்சி மனுஷி சில்லர் என தெரிவித்துள்ளார்.

நடிகை சுஷ்மிதா சென், இந்தியா மிஸ் வேர்ல்ட் 2017 வென்றுள்ளது ! ! சில்லருக்கு வாழ்த்துகள். பெருமை அளிக்கிறது. ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார்.

இதுபோன்று நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, நேஹா தூபியா, முன்னாள் மிஸ் ஆசியா பசிபிக் தியா மிர்சா, நடிகர்கள் அனுபம் கெர், ரந்தீப் ஹூடா உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்