ஹினிதும பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு, நால்வர் காயம்

ஹினிதும பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு, நால்வர் காயம்

ஹினிதும பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு, நால்வர் காயம்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 3:46 pm

காலி – ஹினிதும ஹிங்கல்கொட பகுதியில் கெப் வாகனமொன்று விபத்திற்குள்ளானதில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கிங்கல்கொட தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (19) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கெப் வாகன சாரதி மற்றும் 6 பெண்கள் காயமடைந்து, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்