வானிலை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையிலான செய்மதி விண்ணில் ஏவப்பட்டது

வானிலை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையிலான செய்மதி விண்ணில் ஏவப்பட்டது

வானிலை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையிலான செய்மதி விண்ணில் ஏவப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 3:24 pm

அதியுயர் தொழினுட்பத்திலமைந்த நான்கு துருவ சுற்றுவட்ட செய்மதி நாசா நிறுவனத்தால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது

JPSS 1 என்றழைக்கப்படும் குறித்த செய்மதி மிக விரைவில் NOAA 20 என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

உலகின் அடுத்த தலைமுறைக்கும் பொருந்தும் வகையில் JPSS 1 செய்மதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

JPSS 1 செய்மதி சுமார் 63 நிமிடங்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வளிமண்டல வெப்பநிலை , ஈரப்பதம், மேகங்கள் மற்றும் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை, எரிமலை குமுறல்களை கண்டறிதல் என்பன பற்றிய ஆய்வுகள் JPSS 1 மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், செய்மதியினால் வழங்கப்படும் தரவுகளை அடிப்படையாக கொண்டு வானிலை முன்னறிவிப்பை மிகத்துல்லியமாக பெற்றுக்கொள்ள முடியுமென நாசா தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்