ரொபட் முகாபேவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு சிம்பாப்வே மக்கள் ஆதரவு

ரொபட் முகாபேவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு சிம்பாப்வே மக்கள் ஆதரவு

ரொபட் முகாபேவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு சிம்பாப்வே மக்கள் ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 3:36 pm

சிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ரொபட் முகாபேவுக்கு எதிராக இராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர்

ஜனாதிபதி ரொபட் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவத்தின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் ஜனாதிபதி ரொபட் முகாபேவுக்கு எதிரான இராணுவத்தின் செயற்பாட்டிற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரொபட் முகாபே வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தவில்லை என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கானோர் ஜனாதிபதி ரொபட் முகாபே பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஜனாதிபதி ரொபட் முகாபேவை பதவி நீக்கம் செய்வது குறித்து மாகாண ஆளுநர்கள் அவசர கூட்டம் நடத்த உள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்