யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 41 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 41 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 41 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 5:29 pm

யாழ்ப்பாணம் கோப்பாய் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் வழங்கிய பணிப்புரையின் கீழ் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 3 விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்,கோப்பாய், மானிப்பாய், மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் சுற்றுவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றிவளைப்புகளில் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றைய தினத்தில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்