பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 2:56 pm

பொரளை பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை 9.10 அளவில் அடையாளந் தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைகளுக்காக சடலம், சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்