தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஒரு பயனும் கிடைக்கவில்லை – புதுக்குடியிருப்பு சமூக செயற்பாட்டாளர்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஒரு பயனும் கிடைக்கவில்லை – புதுக்குடியிருப்பு சமூக செயற்பாட்டாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 8:15 pm

நம்பி வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஒரு பயனும் கிடைக்கவில்லை என முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

தம்மை கவனத்திற் கொள்ளாத, அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மண்டபத்தில் ஒன்று கூடிய மக்கள் இன்று பிற்பகல் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது சிலர் தமிழ் அரசுக் கட்சிக்கு சார்பான தீர்மானங்களை எடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

எவ்வாறாயினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர் தாம் சுயேட்சையாக தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்