சாதாரண தரப்பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட வேலைத்திட்டம்

சாதாரண தரப்பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட வேலைத்திட்டம்

சாதாரண தரப்பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 3:55 pm

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதவற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக நாடு தழுவிய ரீதியில் அதிகாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜீத தெரிவித்துள்ளார்.

பரீட்சை மத்திய நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதற்கு அனுமதியளிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை மேற்பார்வையாளர்களின் வசதி கருதி, இம்முறை பரீட்சை நடைபெறும் வகுப்புகளில் 20 மாணவர்களுக்கு மாத்திரமே இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.

இம்முறை பரீட்சையில் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்