கிங்தொட்டை சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கை கோரினார் பிரதமர்

கிங்தொட்டை சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கை கோரினார் பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 8:04 pm

கிங்தொட்டை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பலர் இன்று கிங்தொட்டை பகுதிக்கு சென்றிருந்தனர்.

பிரதமர்……

“முஸ்லிமா , சிங்களமா என்று பார்க்க வேண்டாம். சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துங்கள்”

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்