களனியில் இடம்பெற்ற விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழப்பு

களனியில் இடம்பெற்ற விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழப்பு

களனியில் இடம்பெற்ற விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 3:59 pm

களனி பியகம வீதியின் மாபிம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

டிப்பர் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இரண்டு வயது மற்றும் ஒரு வயதான குழந்தைகளே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்

காயமடைந்த ஏனைய ஐவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்