ஐக்கிய அரபு இராச்சிய வௌிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சிய வௌிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சிய வௌிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 2:48 pm

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சர் ஷெய்க் அப்துல்லா பின் செய்ட் அல் நாயான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று (18) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து இதன்போது ஜனாதிபதி மகிழ்ச்சி வௌியிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவினை மேலும் வலுப்படுத்துவதுடன் முதலீடுகளையும் அதிகரிப்பதற்கும் இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலாத்துறை, நிதி நிறுவனங்கள் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்