இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கு முறக்கொட்டாஞ்சேனை மக்கள் எதிர்ப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கு முறக்கொட்டாஞ்சேனை மக்கள் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 8:18 pm

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கு மக்கள் இன்று எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் செளந்தரநாயகத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு இளைஞர் அணித்தலைவர் எஸ்.சேயோன் உரையாற்ற முயன்ற போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த தினத்தைக் கூட அறியாமல் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

நிகழ்வு நிறைவுபெற்று தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் வெளியேறியபோது மீண்டும் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்