இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முன்னிலையில்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முன்னிலையில்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முன்னிலையில்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 8:27 pm

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 49 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 01 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதேவேளை இலங்கை அணியின் சகலதுறை வீரரான டில்ருவன் பெரேராவின் ஆட்டமிழப்பு தொடர்பில் போட்டி வர்ணனையில் அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை அணியின் சகலதுறை வீரரான டில்வருன் பெரேராவின் ஆட்டமிழப்பு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிகம் பேசப்பட்டது.

தனது ஆட்டமிழப்பு குறித்து மூன்றாவது நடுவரிடம் வினவியமையே அதற்கான காரணமாக அமைந்தது.

சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் பிரகாரம் ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடுகின்ற ஒருவர் மறுமுனையில் உள்ள துடுப்பாட்ட வீரரிடம் கலந்துரையாடியதன் பின்னரே மூன்றாவது நடுவரிடம் வினவுவதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ள முடியும்.

கொல்கத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 172 ஓட்டங்களை பெற்றது.

05 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இலங்கை அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

மத்தியவரிசையில் ரங்கன ஹேரத் 67 ஓட்டங்களைப் பெற, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 294 ஓட்டங்களைப் பெற்றது.

122 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா அணிக்கு ஷிகர் தவான் மற்றும் லோகேஸ் ராகுல் ஜோடி அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தது.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 166 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை பெற்றிருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்