இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 3:09 pm

இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனர்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

மீனவர்களின் படகொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் 4 இந்திய மீனவர்கள் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்