அரிய வகை பறவைகளை திருடும் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

அரிய வகை பறவைகளை திருடும் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 8:03 pm

அரிய வகை பறவைகளை திருடும் கும்பலொன்றைச் சேர்ந்த ஆறு பேர் தங்காலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன் கிழமை மீரிகம பிரதேசத்தில் பெலிஸாரால் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது பாரியளவில் சட்டவிரோத போதைப் பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்தில் மெகோ இனத்தை சேர்ந்த இரண்டு பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவை திருடப்பட்ட பறவைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இதனடிப்படையில் குருணாகல், ராகம, பாணந்துறை மற்றும் அளவதுகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை ஹம்பாந்தோட்டை தனியார் பறவைகள் சரணாலயம் ஒன்றிலும் பண்டாரகம , பாணந்துறை ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பறவைகள் திருட்டுடன் இவர்களுக்கு தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து விலையுயர்ந்த 23 பறவைகள் கைப்பற்றப்பட்டிருந்தன.

ஹாலி குவின் மெகோ இனத்தை சேர்ந்த 4 பறவைகள் மெனிஸ் மெகோ இனத்தை சேர்ந்த சேர்ந்த 06 பறவைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன

50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய பறவைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டிருந்தன.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் வாடகைக்கு அமர்த்திய வாகனத்தை பயன்டுத்தி இந்த சட்டவிரோத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

இவர்கள் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்