மூக்கை அறுப்போம் என தீபிகா படுகோனேவிற்கு மிரட்டல்

மூக்கை அறுப்போம் என தீபிகா படுகோனேவிற்கு மிரட்டல்

மூக்கை அறுப்போம் என தீபிகா படுகோனேவிற்கு மிரட்டல்

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2017 | 5:19 pm

பத்மாவதி படத்தில் நடித்தமைக்காக தீபிகா படுகோனேவிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகை தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவதி’ என்ற சரித்திரப் படம், டிசம்பர் முதலாம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ராஜபுத்திர வம்சத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எதிர்ப்பாளர்களுக்கு தீபிகா படுகோனே கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மக்ரானா, “ஆத்திரமூட்டும் வகையில் பேசுவதைக் கைவிடாவிட்டால், ராமாயணத்தில் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது போல், தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம்” என்று நேற்று மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, தீபிகா படுகோனேவுக்கு மும்பை பொலிஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

தீபிகாவின் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்