ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2017 | 3:46 pm

அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றிய போது அரசுக்கு சொந்தமான 1 இலட்சத்து 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விக்ரமசூரியவுக்கு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

அவர் தற்போது மருத்துவ சிகிச்சைகளுக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் சார்பில் பிணை வழங்கிய நால்வரையும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்