சிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து விலக ராபர்ட் முகாபே மறுப்பு

சிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து விலக ராபர்ட் முகாபே மறுப்பு

சிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து விலக ராபர்ட் முகாபே மறுப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2017 | 4:54 pm

சிம்பாப்வேயின் நீண்ட கால அதிபரான ராபர்ட் முகாபே தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள போதும், அவர் பதவி விலக மறுத்து வருகின்றார்.

முகாபேவிற்கு பிறகு யார் அதிபர் பதவிக்கு வருவார்கள் என்ற அதிகார மோதல் ஏற்பட்டதையடுத்து, 93 வயதான முகாபேவை சிம்பாப்வே இராணுவம் வீட்டுக்காவலில் வைத்துள்ளது.

பிராந்தியத் தூதர்கள் மற்றும் இராணுவத் தளபதியோடு முகாபே நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வௌியிடப்படவில்லை.

என்றாலும், இதுவரை முகாபே பதவி விலக மறுத்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக முகாபே பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரான மோர்கன் சங்கிரை கூறியிருந்தார்.

சனு பி.எஃப் கட்சியையும் அதிபர் பதவியையும் தனது மனைவி கிரேஸ் முகாபேவுக்கு வழங்குவதற்காக, துணை அதிபராக இருந்த எமர்சன் மனங்காக்வாவை பதவியில் இருந்து முகாபே நீக்கியதையடுத்து இராணுவம் இந்நடவடிக்கையை எடுத்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்