கோட்டாபய ராஜபக்ஸ தம்மை விடுதலை செய்யுமாறு விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது

கோட்டாபய ராஜபக்ஸ தம்மை விடுதலை செய்யுமாறு விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2017 | 3:56 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தம்மை விடுதலை செய்யுமாறு விடுத்த வேண்டுகோளை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சட்டத்திற்கு முரணானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மன்றில் கூறியுள்ளார்.

இதனால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவன்ற் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச்செல்வதற்கு அனுமதி வழங்கியதால் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்