ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ ஓடக்கூடிய எலக்ட்ரிக் செமி-ட்ரக் அறிமுகம்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ ஓடக்கூடிய எலக்ட்ரிக் செமி-ட்ரக் அறிமுகம்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ ஓடக்கூடிய எலக்ட்ரிக் செமி-ட்ரக் அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2017 | 5:33 pm

ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் ஓடக்கூடிய எலக்ட்ரிக் செமி-ட்ரக் வாகனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் இதனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

கலிஃபோர்னியாவின் ஹாவ்தோர்ன் பகுதியில், டெஸ்லா நிறுவனத்தினர் இந்த எலக்ட்ரிக் செமி-ட்ரக் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அதன் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், செயற்திறன், இயக்கம் ஆகியவை குறித்து வடிவமைப்பாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய இந்த எலக்ட்ரிக் செமி-ட்ரக் 30 நிமிடங்களில் 80 சதவீதத்தை அடைந்துவிடும் என்று கூறியுள்ளனர். மேலும், 20 விநாடிகளில் 60 மைல் வேகத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எலக்ட்ரிக் செமி-டிரக்கின் விலை மற்றும் எதிர்கால உற்பத்தித் திட்டங்கள் குறித்து நிறுவனம் இன்னும் தகவல் வௌியிடவில்லை.

இந்த செமி-டிரக் சந்தைக்கு வந்தால் சரக்குப் போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்