உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் -படவுள்ளன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் -படவுள்ளன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் -படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2017 | 4:08 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கோரும் விண்ணப்பம் எதிர்வரும் 27 ஆம் திகதி வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

அறிவித்தல் வௌியிடப்பட்டு 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதன்பிரகாரம், டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12.30 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்