இலங்கை, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமும் மழையால் தடைப்பட்டது

இலங்கை, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமும் மழையால் தடைப்பட்டது

இலங்கை, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமும் மழையால் தடைப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2017 | 8:55 pm

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

இன்று 21 ஓவர்களை மாத்திரமே வீச முடிந்த நிலையில், இந்தியா மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று 3 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்களுடன் இந்தியா முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

ஓட்டமின்றி களமிறங்கிய அஜின்கெயா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 4 ஓட்டங்களுடன் தசுன் சானக்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

பொறுமையுடன் துடுப்பெடுத்தாடும் செட்டிஸ்வர் புஜாரா 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டு, அத்துடன் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்