அர்ஜூன் அலோசியஸூடன் உரையாடியவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

அர்ஜூன் அலோசியஸூடன் உரையாடியவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2017 | 3:32 pm

முறிகள் கொடுக்கல் வாங்கல் குறித்து COPE குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் அர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்ட COPE குழுவின் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி வலியுறுத்தியுள்ளார்.

குறித்த உறுப்பினர்களை COPE குழுவிற்கு நியமித்த கட்சித் தலைவர்களால் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் COPE குழுவின் விசாரணை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், 2016 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஒக்டோபர் மாத காலப்பகுதியில் COPE உறுப்பினராக இருந்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் அர்ஜூன் அலோசியஸூக்கு இடையில் 62 தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை வௌிக்கொணரப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மற்றும் அர்ஜூன் அலோசியஸூக்கு இடையில் 23 தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமிக்கு இடையில் 23 தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அலோசியஸூடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடிய மேலும் பலர் தொடர்பிலான தகவல்கள்ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வௌிக்கொணரப்பட்டிருந்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்