தொண்டமானின் பெயர் நீக்கம்: இலங்கையுடன் கலந்துரையாடவுள்ளது இந்தியா

தொண்டமானின் பெயர் நீக்கம்: இலங்கையுடன் கலந்துரையாடவுள்ளது இந்தியா

தொண்டமானின் பெயர் நீக்கம்: இலங்கையுடன் கலந்துரையாடவுள்ளது இந்தியா

எழுத்தாளர் Bella Dalima

16 Nov, 2017 | 3:43 pm

சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசுடன் கலந்துரையாடவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் , ட்விட்டர் வலைத்தளத்தில் தமது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜிற்கு நேற்று முன்தினம் (14) கடிதம் அனுபியிருந்தார்.

இந்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் சுஸ்மா சுவராஜ் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து நீக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு காலமாக இலங்கையின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இந்தியத் தமிழர்களின் பங்களிப்பை உதாசினப்படுத்தும் வகையில் இந்த செயற்பாடு அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு , போர்க்குற்றம் தொடர்பில் நம்பகத்தன்மையான விசாரணைகளை மேற்கொள்ளாமலும் இந்த விடயங்கள் தொடர்பான ஐ.நா. வின் செயற்பாடுகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்காமலும் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது மலையகத்திற்காக பாடுபட்டவரின் பெயரை நீக்கி மலையக மக்களையும் இலங்கை அரசு அச்சுறுத்த ஆரம்பித்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்